
தமிழ்நாடு அஞ்சலக வட்டம், சென்னை அஞ்சல் மோட்டார் சேவையில் புதிய வாகனத்தை இணைப்பதன் மூலம் அஞ்சல் போக்குவரத்து கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. 14.03.2025 அன்று சென்னை எம்எம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு வட்ட தலைமையக அஞ்சல் துறை தலைவர் திருமதி மரியம்மா தாமஸ் இந்த வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை அஞ்சல் மோட்டார் சேவை தற்போது 120 வாகனங்களுடன் செயல்பட்டு வருவதால், இப்பகுதி முழுவதும் தபால், பார்சல்கள் தடையின்றி கொண்டு செல்வதை உறுதி செய்கிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வாகனம் குறுகிய மற்றும் நெரிசலான பகுதிகளில் அமைந்துள்ள அஞ்சல் நிலையங்களுக்கு சேவை செய்யும். தொலைதூர பகுதிகளில் அஞ்சல் போக்குவரத்து சேவைக்கான தொடர்பை மேம்படுத்துவதையும் உரிய நேரத்தில் அஞ்சல் சேவைகளை வழங்குவதையும் உறுதி செய்கிறது.
வாகனத்தின் சிறப்பு அம்சங்கள்:
சிறிய வடிவமைப்பு: ஐஷர் புரோ 2059 என்ற வாகனம் குறுகிய மற்றும் நெரிசலான நகர்ப்புறப் பகுதிகளில் அஞ்சல்கள் மற்றும் பார்சல்களை திறமையாக கொண்டு செல்ல ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட இடவசதி: அஞ்சலகப் பயன்பாட்டிற்கென வடிவமைக்கப்பட்டதன் மூலம் அதிக அதிக எண்ணிக்கையிலான அஞ்சல் மற்றும் பார்சல்களை கொண்டு செல்வதற்கு போதிய இடவசதியை அளிக்கிறது.
ஆயுள் மற்றும் செயல்திறன்: வலுவான கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்ட இந்த வாகனத்தின் கனரக அஞ்சலக செயல்பாடுகளை நீண்ட காலம் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த இணக்கம்: இந்த வாகனம் அண்மையில் பிஎஸ்–6 தரத்திலான மாசு உமிழ்வு விதிமுறைகளை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த வாகனமாக அமைந்துள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்: பவர் ஸ்டீயரிங், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) மற்றும் பணிச்சூழலியல் இருக்கை ஆகியவற்றை இந்த வாகனம் கொண்டுள்ளது. இது ஓட்டுநரின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்கிறது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை தமிழ்நாடு அஞ்சல் வட்டம் மற்றும் அஞ்சல் மோட்டார் சேவையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.