திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வரும் சுப்பையா, முன்னனி பத்திரிகைகளுக்கு நிறுவனங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் அரசு வழங்கும் பிரஸ் பாஸ், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலக வாட்ஸ்அப் குழுக்களில் இணைப்பது உள்ளிட்ட சிறு பத்திரிகைகயாளர்களை வஞ்சிக்கும் வகையில் பல்வேறு வகையான பாரபட்சமமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறாராம்.
இவர்தான் இப்படி என்றால் துணை பிஆர்ஓ-ஆக பணியாற்றி வரும் ஜனார்த்தனனும் இதே பாணியை பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற திங்கள் தின குறைதீர்ப்பு முகாமில் தின தமிழ் பத்திரிகையில் பணியாற்றி வரும் ரஜினி என்பவர் சம்பந்தப்பட்ட பிஆர்ஒ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி நேரடியாக புகார் மனு வழங்கினார்.
இது ஒருபுறம் இருக்க அலுவலகத்தில் பணிபுரியும் பல்வேறு துறை அதிகாரிகள் தங்கள் துறைகளில் அவ்வப்போது நடைபெறும் முக்கிய பிரஸ் தகவல்களை பெற, சம்பந்தப்பட்ட பிஆர்ஒ-விடம் சென்றால் காக்க வைத்துத்தான் தகவல்களை தருகிறார் என்றும்.. அலுவலகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகள் புலம்பி வருகின்றனராம். சில நேரங்களில் “நான் சொல்வதுதான் இந்த அலுவலகத்தில் நடக்கும்” என்று அதிகாரத்துடன் பேசவும் செய்கிறாராம்.
மாத இதழ்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் ஆட்சியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் புகைப்படங்கள் எடுக்க சென்றால் சம்பந்தப்பட்ட அலுவலக துணை பிஆர்ஒ ஜனார்த்தனன் “நீங்கள் இதுபோன்ற நிகழ்வுகளில் வரக்கூடாது” என்று காட்டமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
-S.மோகன், செய்தியாளர்