
நாட்றம்பள்ளி அடுத்த கத்தாரி ஊராட்சியில் புதியதாக அரசு நலவாழ்வு மையம் கட்டி முடிக்கப்பட்டு இன்னும் சில நாட்களில் திறப்பு விழா காணவுள்ளது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட சுகாதார கட்டிடத்திற்கு தேவையான இருக்கைகள் டேபிள் உள்ளிட்ட 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான அத்தியாவசிய பொருட்களை தானாக முன்வந்து சொந்த பணத்தில் கத்தாரி ஊராட்சி ஏரிக்கொல்லை பகுதியில் வசிக்கும் நடேசன் குமாரர் சசி மாலதி தம்பதியர் ஊராட்சி மன்றத் தலைவர் அனிதா மோகன் முன்னிலையில் மருத்துவர் பிரியதர்ஷினியிடம் வழங்கினர்.
இளைஞரின் இச்செயல் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
– S.மோகன்