திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் புதிதாக 11-ஆம் வகுப்பில் அலுவலக செயலாண்மை என்ற தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் எம்.சங்கரன் தலைமையில் நடந்த தொடக்கவிழாவிற்கு நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சி.இரவிவர்மன் முன்னிலை வகித்தார்.
முன்னதாக ஆசிரியர் பெருமாள் அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவருமான NKR.சூரியகுமார் தொடங்கி வைத்தார். தொழிற்கல்வி ஆசிரியர் பெ.ராஜன் மற்றும் கணினி ஆசிரியர் ஜி.மாதலிங்கம் ஆகியோர் கணினி, தட்டச்சு இயந்திரங்களை இயக்கி மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் முருகேசன் நன்றி கூறினார்.
-S.மோகன், செய்தியாளர்