ஆசிரியர்களுக்கான (உயர்கல்வி) தேசிய விருதுகள் 2024 பரிந்துரைகளுக்கான இணையதளத்தை உயர்கல்வித்துறை செயலாளர் திரு சஞ்சய் மூர்த்தி மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுமத் தலைவர் திரு டி.ஜி.சீதாராம் ஆகியோர் இணைந்து இன்று தொடங்கி வைத்தனர்.
பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாரா உயர்கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் பாலிடெக்னிக் நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும். பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், கட்டடக்கலை; கணிதம், உடல் கல்வியியல், உயிரி அறிவியல், வேதியியல் அறிவியல், மருத்துவம், மருந்தியல், கலை மற்றும் சமூக அறிவியல், மனிதநேயம், மொழிகள், சட்ட ஆய்வுகள், வணிகம் மற்றும் மேலாண்மை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 2024, ஜூன் 20 ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் நாட்டின் முன்னாள் குடியரசுத்தலைவரும், ஆசிரியருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி (ஆசிரியர் தினம்) விருது வழங்கப்படும்.
www.awards.gov.in என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம்.
-Sivashankar