
பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பிளஸ்-2 தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 3 முதல் 25 வரை நடைபெற்றுள்ளன. இத்தேர்வுகளில் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாணவர்கள் தேர்வெழுதியதைத் தொடர்ந்து, அவர்களின் விடைத்தாள்கள் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டன. இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பிளஸ்-2 விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் துவங்க உள்ளன. இப்பணிகள் வரும் 17ம் தேதி (வியாழக்கிழமை) வரை தொடரும்.
இந்த மதிப்பீட்டுப் பணிக்காக மாநிலம் முழுவதும் 83 மதிப்பீட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 46,000க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்ற உள்ளனர். விடைத்தாள்களின் மதிப்பீடு முடிந்தவுடன், மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, முன்னர் திட்டமிட்டபடி மே 19ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
– N V Sivashankar