இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல. சமூக வலைப்பின்னல் இளைஞர்களின் சமூகத் திறன்களை நேரடியாகப் பாதிக்கிறது என்பது மட்டுமல்லாமல், அவர்கள் நேரில் சொல்லாத விஷயங்களைச் சொல்லவும் உதவுகிறது. அவற்றுக்கிடையே ஒரு திரையை வைப்பது, மோசமான விஷயங்களைச் சொல்ல அனுமதிக்கிறது. வெளிப்படையாக இது ஒரு மோசமான விஷயமாக இருக்கலாம். ஆனால், நாம் உணர வேண்டிய விஷயம் என்னவென்றால், இதுபோன்ற வெகுஜன மற்றும் எளிதான தொடர்பு இதற்கு முன் மனித வரலாற்றில் நிகழ்ந்ததில்லை.
பின்னர், இந்த அதிகாரத்தை 6-16 வயதுடையவர்களின் கைகளில் வைப்பது அதன் விளைவுகளை ஏற்படுத்துகிறது, பெற்றோர்கள் தங்கள் குழந்தை பயன்படுத்தும் சமூக ஊடகங்களின் பயன்பாட்டைக் கண்காணிக்க வேண்டும் அல்லது கட்டுப்படுத்த வேண்டும். இன்ஸ்டாகிராமும் சமூக வலைதளமும் இன்றைய இளைஞர்களை சீரழிக்கிறது.
இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் இளைஞர்களின் ஈடுபாடு அதிகமாகிக்கொண்டே தான் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் எந்த அளவு வணிக ரீதியாகவும், நண்பர்களுடன் பேசவும், பொழுது போக்கும் செயலியாக இருந்தாலும் அதில் சில ஆபத்துகளும் இருக்கிறது.
பெண்களுக்கு ஆபாசமான மெசேஞ்களும், தகாத வார்த்தையை பயன்படுத்தி திட்டுவதும், கேளி செய்வதும், பாலியல் ரீதியாக தொல்லை
கொடுப்பதும் என தினமும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில் இன்ஸ்டாகிராம் லிமிட் மற்றும் ரெஸ்டிரிக்ட் இரண்டு புதிய பாதுகாப்பு அம்சத்தை கொண்டுவந்துள்ளனர். இந்த அம்சத்தின் மூலம் நமது போஸ்டை யார் காணலாம், யார் மெசேஜ், கமண்ட், டேக் செய்வது என்பதை நாம் முடிவெடுக்கலாம். நாம் பார்க்க கூடாது என்று நினைக்கும் நபர் நமது புகைப்படத்திற்கு கமெண்ட், மெசேஜ்கள் செய்தாலும் அது நமக்கோ பிறர்கோ காண்பிக்காது. நிர்வாண புகைப்படங்களை தெரியாத நபருக்கு அனுப்பினால் அது இன்ஸ்டாகிராம் தானாகவே மறைத்துவிடும் என இந்த அம்சத்தை இளைஞர்களின் பாதுகாப்புகாக முன்னெடுத்து அறிமுகப்படுத்தியுள்ளனர்.
-B.Navinkumar