இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனுரா குமார திசநாயகேவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார். பன்முக ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்ப்பதாக திரு.மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டுள்ளதாவது:
“இலங்கை அதிபர் தேர்தலில் நீங்கள் பெற்ற வெற்றிக்கு வாழ்த்துக்கள். @anuradisanayake.” இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் சாகர் தொலைநோக்கில் இலங்கை உயர் முன்னுரிமை இடத்தைக் கொண்டுள்ளது. நமது மக்கள் மற்றும் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் மேம்பாட்டிற்காக நமது பன்முக ஒத்துழைப்பை மேம்படுத்த உங்களுடன் விரிவாக பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்”.
– PIB