
தமிழ்நாடு அரசின் போக்குவரத்து சேவைகளான விரைவு போக்குவரத்துக் கழகம் (SETC) உள்ளிட்ட அனைத்து அரசுப் பேருந்து நிறுவனங்களும் 20,000க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கி வருகின்றன. தொலைதூர பயணங்களுக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ஆன்லைன் முறை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மொபைல் செயலி மூலம் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, கிராமப்புற மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விரைவில் இ-சேவை மையங்கள் மூலமாகவும் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும், முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை இந்த மையங்கள் வழியாக ரத்து செய்யவும் முடியும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.