திருப்பத்தூர் – நவம்பர் -24:
திருப்பத்தூர் மாவட்டம் கத்தாரி ஊராட்சி பள்ளத்தூர் கிராம ஊராட்சி சேவை மைய வளாகத்தில் நேற்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அனிதா மோகன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலர் சந்தேஷ், துணை தலைவர் மணிமேகலை வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர், கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கிராம சபை கூட்டத்தில் இந்த ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய பம்ப் ஆப்பரேட்டர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் அவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி, பாராட்டினார். சாலை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள், அனைத்து துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் தேவன் நன்றி கூறினார்.
– S.மோகன், செய்தியாளர்