இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா இ.ஆ.ப., திருப்பூர் மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார், பாராளுமன்ற உறுப்பினர்கள் கே. ஈஸ்வரசாமி, கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர் கே. செல்வராஜ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜே. மேகநாத ரெட்டி. இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ், இ.ஆ.ப., திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கோ.மலர்விழி, சர்வதேச தடகள வீரர் ஒலிம்பியன் தருண் அய்யாசாமி, தேசிய தடகள வீராங்கனை செல்வி. ஆர். பிரவீனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.