2024-25 ஆண்டிற்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அட்மா திட்டத்தின் மூலமாக கந்திலி வட்டாரம், சு.பள்ளிப்பட்டு கிராமத்தில் விவசாயிகள் பயிற்சி நடத்தப்பட்டது.
பயிற்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் சுஜாதா தலைமை தாங்கி பேசுகையில்:-
விவசாயிகள் தங்கள் நிலத்தில் மண் பரிசோதனை செய்து சாகுபடி செய்யவேண்டும். மண் வளத்தை பாதுகாக்க பசுந்தாளுரங்களை பயிரிட வேண்டும் என கூறினார்.
கந்திலி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராகினி முன்னிலை வகித்தார். வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, கால்நடைத்துறை, பயிர் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் வேளாண்மை துறை சார்பில் மானாவாரியில் சாகுபடி செய்யப்படும் பயிர்களான நிலக்கடலை, துவரை, பருத்தி, சிறுதானியங்கள் மற்றும் நெல்பயிரில் விதை நேர்த்தி, உயர் விளைச்சல் ரகங்கள் பயன்படுத்துதல், ஒருங்கிணைந்த உர மேலாண்மை, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள், உயிர் உரங்களின் நன்மைகள், நுண்னூட்டச்சத் துகளின் பயன்பாடு பற்றி வேளாண்மை உதவி இயக்குனர் ராகினி கூறினார்.
தோட்டக்கலை சார்பில் சொட்டு நீர்ப்பாசனம், வீட்டுக்காய்கறி தோட்டம் அமைத்தல், பழமரங்கள் வளர்ப்பு, காளான் வளர்ப்பு பற்றியும், உதவி வேளாண் அலுவலர் அறிவழகன் பேசினார். நிலக்கடலையில் ஜிப்சம் இடுதல் மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றி துணை வேளாண்மை அலுவலர் அருள் பேசினார்.
உழவன் செயலி பயன்பாடு, பாரம்பரிய இயற்கை வேளாண்மை பற்றி வேளாண்மை அலுவலர் ஜெயசுதா கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் கோவிந்தராஜ் உயிர் உரங்கள் பயன்படுத்தும் முறைகள் பற்றி கூறினார்.
வட்டார தொழில் நுட்ப மேலாளர் வினோத் அசோலா உற்பத்தி மற்றும் நன்மைகள் குறித்து விளக்கினார். பயிற்சியில் 40 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இறுதியில் உதவி தொழில் நுட்ப மேலாளர் மணியரசன் நன்றி கூறினார்.
-S.Mohan