
2025 சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் யோகா சமவேஷ் என்ற உள்ளடக்கிய கருப்பொருளின் கீழ் மூன்று நாள் சிறப்பு ஐயங்கார் யோகா பயிலரங்கை ஏற்பாடு செய்ய உள்ளது. இந்த நிகழ்ச்சி 2025 ஜூன் 9 முதல் 11 வரை, தினமும் பிற்பகல் 2:00 மணி முதல் 3:00 மணி வரை நடைபெறும்.
இந்த அமர்வுகளை புதுதில்லி, சாணக்யபுரியில் உள்ள லைஃப்யோகா மையத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஐயங்கார் யோகா ஆசிரியர் திரு. அமித் சர்மா வழிநடத்துவார். ஐயங்கார் யோகா பாரம்பரியத்தின் அடையாளங்களான துல்லியமான உடல் சீரமைப்பு நுட்பங்களிலும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் இந்தப் பயிலரங்கம் கவனம் செலுத்தும்.
அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்துடன் இணைந்த அறிஞர்கள் மற்றும் யோகா ஆர்வலர்கள் இதில் பங்கேற்கலாம். ஆர்வமுள்ள நபர்கள், தங்கள் பெயர்கள் மற்றும் தொடர்பு விவரங்களை நிறுவனத்தின் ஸ்வஸ்தாவ்ரிதா துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் ராமவ்தர் சர்மாவிற்கு (dr.rsharma@aiia.gov.in) அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.