
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா ஊராட்சிக்குட்பட்ட புள்ளனேரி வட்டம் பகுதியில் சிப்காட் அமைக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி மக்கள் கடந்த சில நாட்களாக எதிர்ப்பு தெரிவித்தும் போராடியும் வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கோயான்கொல்லை பகுதியில் உள்ள பொது இடத்தில் எதிர்வரும் அக்டோபர் 6 திங்கட்கிழமை அன்று சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவது தொடர்பாக பலதரப்பட்ட பொதுமக்கள் மத்தியில் ஆலோசனை மற்றும் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஊராட்சியின் முன்னாள் மற்றும் இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு.
இப்போராட்டம் தீவிரமடையும் நிலையில் ஆளும் அரசு சம்பந்தப்பட்ட பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
-மோகன்