
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை பெறுவதற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு தேர்வில் மாவட்டம் முழுவதும் இருந்தும் 37 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இத்தேர்வில் மல்லப்பள்ளி ஊராட்சி அடுத்த சுண்ணாம்பு குட்டை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பரணிமுத்து, திவ்ய பிரகாஷ், புவியரசு மற்றும் மாணவி பரணி ஆகிய நால்வர் தேர்ச்சி பெற்றனர்.
மாணவர்களுக்கு பள்ளியின் (பொறுப்பு) தலைமை ஆசிரியர் சங்கர் பெற்றோரை நேரில் அழைத்து மாணவர்களை வாழ்த்தினார். பள்ளியில் தலைமையாசிரியர் இல்லாத போதும் ஒரே பள்ளியில் பயிலும் 4 மாணவர்கள் அரசின் உதவித்தொகை பெற தேர்வாகியுள்ளது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
சம்பந்தப்பட்ட மாதம் 1000 உதவித் தொகையானது பன்னிரண்டாம் வகுப்பு வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
– S.மோகன், செய்தியாளர்