சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வரும் திருமதி எல் சி விக்டோரியா கௌரி, திரு பி பி பாலாஜி, திரு கே கே ராமகிருஷ்ணன், திருமதி ஆர் கலைமதி, திருமதி கே ஜி திலகவதி ஆகிய ஐந்து பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையின் பேரில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-PIB