பொது நிகழ்ச்சிகளின் போது தனக்குக் கிடைத்த நினைவுப் பரிசுப் பொருட்களின் ஏலம் தொடங்கி வைக்கப்படுவதை அறிவிப்பதில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் நமாமி கங்கை திட்டத்திற்கு செல்கிறது. pmmementos.gov.in என்ற இணையதளத்தில் நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுக்குமாறு குடிமக்களை திரு மோடி கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
“ஒவ்வொரு ஆண்டும், பொது நிகழ்ச்சிகளின் போது எனக்குக் கிடைக்கும் பல்வேறு நினைவுப் பரிசுகளை ஏலம் விடுகிறேன். இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் நமாமி கங்கை திட்டத்திற்கு செல்கிறது. இந்த ஆண்டுக்கான ஏலம் தொடங்கியுள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது அபிமான நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்!
-PIB