2022- மார்ச் 31 உடன் முடிவடைந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் ‘கட்டிடங்கள் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் நலன்’ குறித்த செயல்பாட்டு தணிக்கை அறிக்கையை தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி 27.05.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநரிடம் அளித்தார். மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்காக இந்த அறிக்கை அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரி, தணிக்கை அறிக்கையை ஆளுநரிடம் வழங்க இந்திய அரசியல் சட்டம் பிரிவு 151(2) வகை செய்கிறது.
முதன்மை தலைமைக் கணக்கு அதிகாரி திரு சி.நெடுஞ்செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
-PIB