
36வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு இன்று (28-01-25) வட்டார போக்குவரத்து அலுவலகம் திருப்பத்தூரில் புதியதாக பொறுப்பேற்றிருக்கும் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு. K.பன்னீர்செல்வம் அவர்கள், அலுவலகத்திற்கு வந்திருக்கும் அனைத்து பொது மக்களுக்கும், ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், வாகன டீலர்கள், கன்சல்டன்கள் சாலை பாதுகாப்பு குறித்து ஒரு மணி நேரம் வகுப்புகள் எடுக்கப்பட்டது.



இதில் ஹெல்மெட் அணிவது குறித்து விரிவான விரிவுரை அளிக்கப்பட்டது. அலுவலக ஊழியர்கள் உள்பட சுமார் 200 நபர்கள் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு பதில் அளித்து சிறப்பான முறையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது.
– செய்தியாளர் S.மோகன்