திருச்சியில் மத்திய அரசின் சார்பில் நடைபெற்ற ரோஜ்கர் மேளா எனும் வேலைவாய்ப்புத் திருவிழாவில், 125 பேருக்குப் பணி நியமன ஆணைகளை, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் இன்று வழங்கினார்.
நாடு முழுவதிலும் ரயில்வே, சுங்கம், வணிக வரி, அஞ்சல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிதாகப் பணிக்குத் தேர்வான 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இன்று ஒரே நாளில் பிரதமர் திரு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக, பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நாட்டின் 40 இடங்களில் பணி நியமன ஆணைகளை வழங்குவதற்கான சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் திருச்சி மண்டலத்தில் தேர்வான 125 பேருக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, திருச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் பங்கேற்றுப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-PIB