திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மின்சாரக் கட்டண உயர்வு ரேஷனில் கடந்த சில மாதங்களாக முறையாக பொருட்கள் கிடைக்காமல் இருப்பது மற்றும் காவிரி நீரை முறையாக தராத கர்நாடக அரசைக் கண்டித்தும் தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று காலை ஈடுபட்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தேமுதிக கழக அவைத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை கட்சியின் நகர கழக செயலாளர் மதன்ராஜ வரவேற்றார். உடன் மாவட்ட கழக செயலாளர் ஹரிகிருஷ்ணன் மாவட்ட கழக பொருளாளர் ஆஞ்சி மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராகவும் கர்நாடக அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
சிறப்பு அழைப்பாளராக கழக கேப்டன் மன்ற துணை செயலாளர் ராஜ சந்திரசேகர் கலந்து கொண்டு ஆளும்கட்சிக்கு எதிராக கண்டன உரையாற்றினார்.
-S.Mohan