கந்திலி வட்டாரம் பேராம்பட்டு கிராமத்தில் மண்புழு உரம் உற்பத்தி குறித்து விவசாயிகள் பயிற்சி வேளாண்மை துறையின் மூலம் அட்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது. பயிற்சிக்கு கந்திலி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராகினி தலைமை தாங்கினார். பேராம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. சாந்தி முருகன் முன்னிலை வகித்தார். இயற்கை வேளாண்மையை கடைபிடித்து ரசாயன இடுபொருட்களை தவிர்த்து இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும், வீட்டு காய்கறி தோட்டம் அமைக்கும் பெண்களுக்கும் மண்புழு உரம் மிகவும் பயன் தரும் உரமாக இருக்கும். வேளாண்மை துறையில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் மண்புழு தயாரிப்பை ஊக்குவிக்கும் பொருட்டு சில்பாலின் பைகள் மானியத்தில் வழங்கபடுகிறது.
பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலமாகவும் சில்பாலின் பைகள் வழங்கப்படும் என வேளாண் உதவி இயக்குனர் ராகினி தெரிவித்தார். சுந்தரம்பள்ளி முன்னோடி இயற்கை விவசாயி திரு. சுப்பிரமணி இயற்கை விவசாயம் செய்ய முதலில் நிலத்தின் மண்ணை வளமாக்கவேண்டும். கோடை உழவு செய்து தொழு உரமிட்டு பின்பு பயரிட்ட பிறகு ஜீவமிர்தம், அமிர்த கரைசல், மீன் அமிலம் போன்றவற்றை தயாரித்து பயன்படுத்த வேண்டும். இதனால் மண்ணில் உள்ள நுண்ணயிர்களும் மண்புழுக்களும் பெருக்கமடைந்து, மண்ணை வளமாக்கிவிடும். எந்த பயிர் சாகுபடி செய்தாலும் நல்ல விளைச்சலை தரும், நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்து நலமோடு வாழலாம் என பேசினார்.
வட்டார தொழில் நுட்ப மேலாளர் வினோத் குமார் வரவேற்றார். உதவி வேளாண்மை அலுவலர் கோவிந்தராஜ் நன்றி கூறினார். உதவி தொழில் நுட்ப மேலாளர் மணியரசு, குமார் பயிற்சி ஏற்படுகளை செய்திருந்தனர். பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
– S.Mohan