
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் இயங்கி வரும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக “போதையின் பாதையில் மிகவும் சீரழிவது வீடா? நாடா? “என்னும் தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது. வீடே என்ற தலைப்பில் வ.கீர்த்திகா, எஸ்.வினோதினி, சா.ஜெஷிகா பவித்ரா ஆகிய மாணவிகள் போதையால் குடும்பங்கள் சீரழிவதைப் பற்றிப் பேசினர்.
ஜெ.கீர்த்திவாசன், ஆ.மோகனா, ஆதவன் கிருஷ்ணா ஆகியோர் போதையால் மிகவும் சீரழிவது நாடே எனப் பேசினர். தமிழ்த்துறைப் பேராசிரியரும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான முனைவர் க.மோகன்காந்தி நடுவராக இருந்து இளைஞர்கள் வீடு மற்றும் நாடு இரண்டிற்கும் எந்தவிதமான தீங்கும் வாராமல் போதையின் பாதைக்குச் செல்லாமல் வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமைகளைத் தேடித் தரவேண்டும் என்று பேசிப் பட்டி மன்றத்தை முடித்து வைத்தார்.
இந்நிழ்ச்சியில் பேராசிரியர்கள் முனைவர் ஜூலியன்,திரு. மதன்குமார், முனைவர் நெப்போலியன் ஆகியோர் கலந்து கொண்டனர். NSS, AICUF, RRC, YRC பிரிவைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரளாகப் பங்குபெற்றனர். இறுதியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் தலைவர் மதன்குமார் நன்றி கூறினார்.
– S.மோகன்