திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று கே.சி.வீரமணி அவர்கள் அதிமுகவின் அமைச்சராக பதவியேற்றார்.
அதன் தொடர்ச்சியாக குறிப்பாக திருப்பத்தூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த தனி மாவட்டம், எஸ்பி அலுவலகம், நாட்றம்பள்ளி தனி வட்டம், நாட்றம்பள்ளி பலவகைத் தொழில்நுட்ப கல்லூரி, கந்திலி அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட முக்கியமான பணிகளை செய்ததன் மூலம் இம்மாவட்ட மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார்.
மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை இவரிடம் நேரடியாக தெரிவிக்கும் போது உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை போனில் தொடர்பு கொண்டு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று அன்பாக கோரிக்கை விடுப்பாராம்.
வருடங்கள் கடந்து ஆட்சிகள் மற்றும் காட்சிகள் மாறினாலும் இம்மாவட்ட மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் இவர். இதுபோன்ற செயல்களால் ஆட்சியில் இல்லாவிட்டாலும் இம்மாவட்ட மக்களின் மனதில் இன்றும் நீங்கா இடம் பெற்றவராக விளங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-S.Mohan