
திருப்பத்தூர் மாவட்டத்தின் ஐந்தாவது புதிய ஆட்சியராக திருமதி சிவ சவுந்தரவள்ளி இ.ஆ.ப அவர்கள் கடந்த பிப்ரவரி 4 செவ்வாய்க்கிழமை அன்று கோப்புகளில் கையொப்பமிட்டு முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு பல்துறை அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் நேரடியாக சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.


அதனைத் தொடர்ந்து அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான குறைத்தீர்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார்.உடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கண்ணன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் இருந்தனர்.
முன்னதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக மோகனச் சந்திரனை தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
– S.மோகன், செய்தியாளர்