தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மைய முடிவின்படி, கொல்கத்தா மருத்துவ மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட கோரச் சம்பவத்தினைக் கண்டித்தும், குற்றவாளிகளை தூக்கிலிடவும், நாடு முழுவதும் பெண் மீதான பாலியல் சுரண்டலைத் தடுத்து நிறுத்திடவும், இன்று (02.09.2024) மாலை 5.45 மணியளவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, மெழுகு வர்த்தி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் தோழர் க.அருள்மொழிவர்மன் தலைமையேற்று நடத்திக் கொடுத்தார். வரவேற்புரை தோழர் K.R ராஜ்குமார் மாவட்ட பொருளாளர் முன்னிலை தோழர் பூவண்ணன் மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டத்தின் விளக்கு உரையாக தோழர் வ. பிரேம்குமார் மாவட்ட துணை தலைவர் பேசினார் இறுதியாக தோழர் தா. பாண்டியன் நன்றியுரை வழங்கி முழக்கத்துடன் போராட்டம் நிறைவடைந்தது.
– S.Mohan