திருப்பத்தூர் மாவட்டம் எலவம்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு கடந்த ஏப்ரல் 29 செவ்வாய்க்கிழமை பல்வேறு அலுவல் பணிகளுக்காக வந்திருந்த சுமார் 150 நபர்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம் அவர்கள் வாகனத்தில் சைடு மிரர் தேவை குறித்தும், இருசக்கர வாகனத்தில் பம்பர் தேவை குறித்தும், நான்கு சக்கர வாகனத்தில் பம்பர்-ன் ஆபத்தை குறித்தும் மற்றும் எல்இடி விளக்குகளின் ஆபத்துகளை குறித்தும் விரிவான விளக்கவுரை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் விழிப்புணர்வின் போது பொதுமக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கும் வட்டார போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம் விரிவான விளக்கம் அளித்தார்.
நிகழ்வில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
– S.Mohan