
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், கூடுவாஞ்சேரி அருகில் உள்ள மாடம்பாக்கம் கிராமத்தில் திருவள்ளுவர் கலை இலக்கிய மன்றத்தின் 9-ஆம் ஆண்டு விழா 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.



இவ்விழாவிற்கு திருவள்ளுவர் கலை இலக்கிய மன்ற தலைவர் E.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார், செயலாளர் டில்லி ராஜ் வரவேற்பு நிகழ்த்தினார், பொருளாளர் முல்லைநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக நாவேந்தர் பாவலர் குடியாத்தம் குமணன் ஐயா அவர்கள் சிறப்புரையாற்றினார்.


தொடர்ந்து எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய “வேள்பாரி” என்ற நூலை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து மாடம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்று திருக்குறள் ஒப்பிவித்தல், நடனம், நாட்டுப்புற பாடல்கள், சிலம்பம் கவிதை, யோகா, நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் அசத்தினர்.

திருக்குறளில் வாழ்வியல் சிந்தனை, திருக்குறளில் பெண்ணிய சிந்தனை, திருக்குறளில் மருத்துவம் மற்றும் பிறப்பால் அனைவரும் சமம் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவள்ளுவர் கலை இலக்கிய மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆசிரிய பெருமக்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியை திருவள்ளூர் கலை இலக்கிய மன்ற உறுப்பினர் திரு. ஆரோக்கிய பிரிட்டோ அவர்கள் தொகுத்து வழங்கினார்.
– M. பாலசுப்ரமணியன், செய்தியாளர்