தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 5293 மின்சார வாகன மின்னேற்ற நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ரூ.178 கோடி செலவில் 4,729 மின்னேற்ற நிலையங்கள் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டதாகும்.
இதில் தமிழகத்தில் 369 மின்னேற்ற நிலையங்களும், பாண்டிச்சேரியில் இரண்டு மின்னேற்ற நிலையங்களும், கேரளாவில் 138 மின்னேற்ற நிலையங்களும், கர்நாடகாவில் 300 மின்னேற்ற நிலையங்களும், ஆந்திரப்பிரதேசத்தில் 249 மின்னேற்ற நிலையங்களும், தெலங்கானாவில் 221 மின்னேற்ற நிலையங்களும் உள்ளன.
கனரக தொழில் துறை அமைச்சகத்தின் சார்பில் நெடுஞ்சாலைகளில் மொத்தம் 5833 மின்சார வாகன மின்னேற்ற நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தமிழ்நாட்டில் 649 மின்னேற்ற நிலையங்களும், பாண்டிச்சேரியில் 16 மின்னேற்ற நிலையங்களும், கேரளாவில் 189 மின்னேற்ற நிலையங்களும், ஆந்திரப்பிரதேசத்தில் 319 மின்னேற்ற நிலையங்களும், தெலங்கானாவில் 244 மின்னேற்ற நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தகவலை மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
-PIB