
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா ஊராட்சிக்குட்பட்ட புள்ளனேரி வட்டம் பகுதியில் சிப்காட் அமைக்கப்படும் என்று கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஜோலார்பேட்டையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வருவாய் துறை சார்பில் சம்பந்தப்பட்ட இடத்தில் நிலம் எடுப்பதற்காக நிலம் அளவீடு செய்யும் பணிகளில் கடந்த வாரம் ஈடுபட்டிருந்த போது சம்பந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் சிப்காட் தங்கள் பகுதியில் தேவையில்லை என்றும் நிலம் அளவீடு செய்யக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை அதிகாரிகளிடம் முன் வைத்தனர்.
இக்கூட்டத்தில் நாட்றம்பள்ளி வருவாய் வட்டாட்சியர் காஞ்சனா விஏஓ சந்திரமோகன் நாட்றம்பள்ளி இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி சதீஸ்குமார் துணை தலைவர் மல்லிகா முனிசாமி முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரேமலதா சாம்ராஜ் ஊராட்சியின் முன்னாள் மற்றும் இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-S.Mohan