திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இருமுனை மற்றும் மும்முனை மின்சாரம் சப்ளை இருந்தாலும் ஆழ்துளை கிணறுகளை இயக்கும் அளவிலான மின் சப்ளை இல்லாமல் இருப்பதால் கடந்த பல நாட்களாக இப்பகுதியில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை விடுத்து குடிநீருக்கே அல்லல்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசும்போது நிலைமை கூடிய விரைவில் சரியாகும் என்று கூறினர். ஆனால் நிலைமை சரியாவது என்று என்பதை உறுதியாக கூற இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் காசு கொடுத்து நீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இவ்வளவு மழை பெய்தும் முறையான மின்சப்ளை இல்லாததால் இப்பகுதியில் செயற்கையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவது இப்பகுதி மக்களை வேதனை அடையச் செய்துள்ளது. சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா..?
– செய்தியாளர் S.மோகன்