
நாட்றம்பள்ளி வாரச்சந்தை மைதானத்தில் அமைந்துள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிக்கு அருகில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதிய கழிவறை கட்ட ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில் கழிவறை கட்டும் பட்சத்தில் குடிநீர் தொட்டியில் கழிவறை நீர் கலக்கும் சூழல் ஏற்படும் என்றும் மாற்று இடத்தில் கட்ட நடவடிக்கை வேண்டும் என்றும் இன்று காலை இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் நேரடியாக கோரிக்கை மனுவை வழங்கினர்.

ஏற்கனவே சந்தை மைதானம் பலவிதமான கட்டுமானப் பணிகளால் சுருங்கி வரும் நிலையில் ஆட்டுச் சந்தை நடைபெற்று வரும் இடத்தில் இக்கட்டிடம் அமைந்தால் மைதானத்தின் இடம் மேலும் சுருங்கும் என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி சுமூகமான முடிவை எடுக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.
– S.Mohan