த்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணி நியமனத்திற்கு பணியாளர் தேர்வாணையமான எஸ்எஸ்சி நடத்தும் கட்டம் – XII /2024 / தேர்வு தென் மண்டலத்தில் கணினி அடிப்படையில் 20.06.2024 தொடங்கி 26.06.2024 வரை வரையிலான காலகட்டத்தில் 5 நாட்கள் நடைபெறும்.
தென் மண்டலத்தில் இந்தத் தேர்வை 1,07,398 பேர் தேர்வு எழுதத் தகுதி பெற்றுள்ளனர். ஆந்திராவில் ஓங்கோல், குண்டூர், காக்கிநாடா, கர்னூல், நெல்லூர், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம், விஜயநகரம், தெலுங்கானாவில் ஹைதராபாத், கரீம்நகர், வாரங்கல், தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய 21 நகரங்களில் 22 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.
மின்னணு தேர்வு அனுமதிச் சான்றிதழ்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தேர்வு தேதிக்கு 4 நாட்களுக்கு முன்புதொடங்கி இதை பதிவிறக்கம் செய்ய முடியும்.
இந்தத் தேர்வு தொடர்பான மேலும் தகவல்களுக்கு பணியாளர் தேர்வாணையத்தின் தென்மண்டல அலுவலகத்தை 044 2825 1139 என்ற தொலைபேசி எண்ணிலும் 94451 95946 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
-PIB