திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா வாரச்சந்தை மைதானத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளை மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் அவர்கள் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையை வழங்கினார். தொடர்ந்து தாசிரியப்பனூர் மேல்நிலைப்பள்ளியில் பயின்று 10,11, மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய மாவட்ட எஸ்பி பொதுமக்களிடையே பேசும்போது:-
கிராமத்தில் பிறந்து வளர்ந்து அரசுப் பள்ளிகளில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் இந்த கிராமத்தில் இருந்து எதிர் காலத்தில் மருத்துவர்கள் கலெக்டர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் வரவேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சி ஏற்பாட்டை திம்மாம்பேட்டை காவல்துறையினர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி சதீஸ்குமார் திம்மாம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ரூகன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
-S.மோகன், திருப்பத்தூர்