
திரு எலான் மஸ்க்குடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (18.04.2025) ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன் டிசி-யில் நடந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து மீண்டும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இது தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான பகிரப்பட்ட பார்வையை எடுத்துக் காட்டுகிறது.
தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளில் இந்தியா – அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்புக்கான மகத்தான வாய்ப்புகளை பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்தத் துறைகளை ஒத்துழைப்பின்மூலம் முன்னெடுத்துச் செல்வதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் எடுத்துரைத்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி யிருப்பதாவது:
“இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன் டிசி-யில் நடந்த எங்கள் சந்திப்பின் போது நாங்கள் பேசிய விஷயங்கள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து எலான் மஸ்க்கும் (@elonmusk) நானும் கலந்துரையாடினோம் தொழில்நுட்பம், புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான மகத்தான வாய்ப்புகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்தத் துறைகளில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது.”