இந்திய நியாயச் சட்டம் 2023, இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம் 2023, இந்திய சாட்சியச் சட்டம் 2023 ஆகிய புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அரசின் அறிவுரைகள், பத்திரிகை செய்தி, தகவல் வரைபடம் மூலம் சமூக வலைதளங்கள் வாயிலாக புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து பத்திரிகை தகவல் அலுவலகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. புதிய குற்றவியல் சட்டங்களின் முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்க 27 மாநிலங்களின் தலைநகரங்களில் பயிலரங்குகளை நடத்தியது.
அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் ஆகியவை சமூக வலைதளங்கள் மூலம், செய்தி அறிக்கைகள், நிகழ்ச்சிகள் மற்றும் விவாதங்கள் வாயிலாக புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து எடுத்துரைத்தது. நிகழ்ச்சிகளுக்கு இடையே புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விளக்கும் காட்சிகளும் இடம்பெற்றன.
2024, பிப்ரவரி 19 அன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த தகவல்கள் சுமார் 7 கோடி பேருக்கு மின்னஞ்சல் வாயிலாக மைகவ் இணையதளம் மூலம் அனுப்பப்பட்டது. 2024, மார்ச் 14-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை விநாடி-வினா நிகழ்ச்சியையும் மைகவ் இணையதளம் நடத்தியது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஊரக மேம்பாட்டு அமைச்சகம், பஞ்சாயத் ராஜ் அமைச்சகம் ஆகியவை இணைந்து புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த இணையவழி கருத்தரங்கை 2024, ஜூன் 21 அன்று ஹிந்தி மொழியில் நடத்தியது. இதில் 40 லட்சம் பேர் கலந்துகொண்டனர். மற்றொரு இணையவழி கருத்தரங்கை 2024, ஜூன் 25 அன்று ஆங்கிலத்தில் நடத்தியது.
இத்தகவலை மத்திய உள்துறை இணையமைச்சர் திரு பந்தி சஞ்சய் குமார் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
-PIB