
அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (சி.ஐ.எஸ்.எஃப்) ஆட்சேர்ப்பு பயிற்சி மையம் (ஆர்.டி.சி) இனி ராஜாதித்ய சோழன் ஆர்.டி.சி தக்கோலம் என்று பெயர் மாற்றப்பட உள்ளது. 24.02.2025 முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னர் முதலாம் பராந்தகனின் மகனான சோழ இளவரசன் ராஜாதித்ய சோழன், தக்கோலம் போரில் (948-949) சோழப் படைகளுக்குத் தலைமை தாங்கினார் கி.பி 948-949 இல் நடந்த தக்கோலம் போரின்போது போர்க்களத்தில் ராஜாதித்யன் இறந்ததுடன், தக்கோலத்தில் சோழப்படை தோற்கடிக்கப்பட்டது.
ராஜாதித்ய சோழன் ஆர்.டி.சி தக்கோலத்தின் புதிய அலுவலக பெயர் மற்றும் முகவரி:
துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகம்,
ராஜாதித்ய சோழன் ஆர்.டி.சி, தக்கோலம் அஞ்சல் அலுவலகம்: சுரக்ஷா வளாகம், அரக்கோணம் வட்டம், ராணிப்பேட்டை மாவட்டம் (தமிழ்நாடு) அஞ்சல் குறியீடு – 631152.