திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா ஊராட்சிக்குட்பட்ட குருபவாணிகுண்டா அம்மாபாதம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள காலி இடத்தில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்பேட்டை அமைக்கும் முயற்சியாக வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் இடம் எடுப்பு குழுவினர் அடங்கிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் இன்று சம்பந்தப்பட்ட இடத்தில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரடி கள ஆய்வில் ஈடுபட்டார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் வருவாய் அலுவலர் ராஜேஸ் வட்ட தலைமை நில அளவையர் பாபு கிராம நிர்வாக அலுவலர் சந்திரமோகன் மற்றும் ஊர் பொதுமக்கள் இருந்தனர்.
வானம் பார்த்த பூமியாக இருக்கும் இப்பகுதியில் தொழிற்பேட்டை அமையும் பட்சத்தில் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும் இதனால் வருடக் கணக்கில் சொந்த ஊரை விட்டு வெளிநாடுகளில் பணிபுரியும் இளைஞர்கள் இதே பகுதியில் குடும்பத்துடன் தங்கி பணிபுரியும் சூழல் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
– S.Mohan