மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள், அறிவிப்புகள், ஆணைகள், செய்தி வெளியீடுகள், அறிக்கைகள். வேண்டுகோள்கள் முதலிய அனைத்தையும் மக்களுக்கு உடனுக்குடன் கொண்டு சென்று சேர்த்திடும் அரும்பணியை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது.
இத்துறையில் ஒழிவாக இருந்த வாகன ஓட்டுநர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள மூன்று பேருக்கு வாகன ஓட்டுநர்களுக்கான பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமைச் செயலகத்தில் இன்று (02.07.2024) வழங்கி வாழ்த்துகள் கூறினார்.
இந்நிகழ்வின்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன், இ.ஆ.ப., அவர்கள், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மருத்துவர் இரா.வைத்திநாதன். இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.
-வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9