திருப்பத்தூர் மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற கூட்டம் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மா.பா.இளவரசி தலைமையில் நடந்தது. முன்னதாக பள்ளித்துணை ஆய்வாளர் தாமோதரன் அனைவரையும் வரவேற்றுப்பேசினார். மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சி.இரவிவர்மன் முன்னிலை வகித்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குணசுந்தரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விளக்கவுரையாற்றினார். மாவட்ட பசுமைத்தோழன் விஷ்ணு அவர்கள் 145 பள்ளி ஒருங்கிணைப் பாளர்களுக்கு பசுமை தமிழ்நாடு மிஷன் வலைதளத்தில் பள்ளி சுற்றுச்சூழல் செயல்பாடுகள் குறித்தும், 2024-25-ஆம் கல்வி ஆண்டு சுற்றுச்சூழல் செயல் பாடு கால அட்டவணை குறித்தும் பதிவு செய்ய பயிற்சி அளித்தார். கூட்ட முடிவில் தேசிய பசுமைப்படை மாவட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் பெ.அருண்குமார் நன்றி கூறினார்.
-S.Mohan