
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மூக்கனூர் கிராமத்தில் இன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்தரவள்ளி தலைமையில் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.


முகாமில் சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் கலந்து கொண்டு பேசியபோது:-
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது என்றும் இன்னும் மூன்று மாதங்களில் விடுபட்ட ரன் ரேசன் அட்டை தாரர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
அதனைத்தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்தரவள்ளி பேசும் போது: மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு இதுதான் தான் கலந்து கொண்டு பேசும் முதல் பொதுக் கூட்டம் என்று பேசினார். பொதுமக்கள் தங்களுடைய குறைகள் எதுவாக இருப்பினும் அதிகாரிகளை நேரடியாக அணுகி தெரிவிக்கலாம் என்றும் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்த குறைகளைக் இனிவரும் கூட்டங்களில் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேசினார்.
அதனைத் தொடர்ந்து வருவாய் துறை மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்தரவள்ளி மற்றும் எம்எல்ஏ தேவராஜ் ஜோலார்பேட்டை ஒன்றிய சேர்மன் சத்தியா சதீஸ்குமார் ஆகியோர் இணைந்து வழங்கினர். உடன் நாட்றம்பள்ளி வருவாய் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் கிராம நிர்வாக அலுவலர் அருணா ஊராட்சி தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
– S.Mohan