
நாடு முழுவதும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள்/சேவைகளை வழங்குவதற்கான முறையான மற்றும் முறைசாரா திட்டங்கள்/ கோரிக்கைகள்/ பிரதிநிதித்துவங்கள், மாநில அரசுகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ரயில்வேயின் சொந்தத் தேவைகள், அமைப்புகள்/ ரயில் பயனர்கள் போன்றோர் எழுப்பும் கோரிக்கைகளின் அடிப்படையில் பெறப்படுகின்றன. அவற்றைப் பெறுவது தொடர்ச்சியான மற்றும் துடிப்பான செயல்முறையாக இருப்பதால், அத்தகைய கோரிக்கைகளின் மையப்படுத்தப்பட்ட தொகுப்பு பராமரிக்கப்படுவதில்லை. இருப்பினும், இவை அவ்வப்போது ஆராயப்பட்டு, சாத்தியமானதாகவும் நியாயமானதாகவும் கருதப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
ஈரோடு தொகுதியைப் பொறுத்தவரை, சாலை மேம்பாலம் /சாலைக்கு அடியில் அமைக்கப்படும் பாலம், ரயில் நீர்வழிப் பாலம், ரயில்கள் நிறுத்தம் போன்றவற்றுக்கான பல்வேறு பிரதிநிதித்துவங்கள் பெறப்பட்டுள்ளன.
2014-25 (ஜூன்’25) காலகட்டத்தில் இந்திய ரயில்வேயால் 13,426 2004-14 காலகட்டத்தில் சாலை மேம்பாலம் /சாலைக்கு அடியில் அமைக்கப்படும் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் 747 பாலங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன.
01.04.2025 நிலவரப்படி, ரூ. 1,00,860 கோடி செலவில் 4,402 சாலை மேம்பாலம் /சாலைக்கு அடியில் அமைக்கப்படும் பாலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் தமிழ்நாட்டிற்கான ரூ. 4,669 கோடி செலவில் 235 பாலங்கள் அடங்கும். இவை திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. தற்போது, ஈரோடு தொகுதியில் 13 பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ள முக்கிய நிலையங்களான ஈரோடு, கொடுமுடி, பாசூர் மற்றும் இங்கூர் ஆகிய ரயில் நிலையங்களுக்கு முறையே 174 ரயில் சேவைகள் (4 வந்தே பாரத் ரயில் சேவைகள் உட்பட), 14, 8 மற்றும் 6 ரயில்கல் இயங்குகின்றன. அமிர்த பாரத நிலையத் திட்டத்தின் கீழ், ஈரோடு சந்திப்பு நிலையம் உட்பட தமிழ்நாட்டிலிருந்து 77 நிலையங்களை உள்ளடக்கிய 1,337 நிலையங்கள் மேம்பாட்டிற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நல்ல வேகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை, தமிழ்நாட்டில் 09 நிலையங்களின் (சிதம்பரம், குளித்துறை, மன்னார்குடி, போளூர், சமல்பட்டி, ஸ்ரீரங்கம், செயிண்ட் தாமஸ் மவுண்ட், திருவண்ணாமலை, விருத்தாசலம் சந்திப்பு) முதல் கட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.