தமிழ்நாடு அஞ்சல் வட்டம், அஞ்சல் துறை சார்பில் வட்ட அளவிலான வாடிக்கையாளர் குறை தீர்க்கும் முகாம் 26.06.2024 (புதன்கிழமை) அன்று காலை 11.00 மணிக்கு முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை-600 002 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
முதன்மை அஞ்சல் துறைத் தலைவர், அஞ்சல் துறை வாடிக்கையாளர்களின் குறைகளை நேரில் கேட்டு அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வார். வாடிக்கையாளர்கள் தங்கள் அஞ்சல் சேவைகள் குறித்த குறைகளை ‘DAK ADALAT’ என்ற தலைப்பில் 18.06.2024-ம் தேதிக்குள் திருமதி E.சுந்தரேஸ்வரி, உதவி அஞ்சல் துறை இயக்குநர், முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை 600 002 என்ற முகவரிக்கும், pg.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.
அஞ்சல் சேவைகள் தொடர்பான குறைபாடுகள் (விரைவு அஞ்சல், பார்சல்கள், மணி ஆர்டர்கள் மற்றும் சேமிப்பு வங்கி, சேமிப்பு பத்திரங்கள் மற்றும் இதர சேவைகள்) இந்த குறைத் தீர்க்கும் முகாமில் பரிசீலிக்கப்படும்.
-PIB