ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் கிராமத்தில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் திருமதி. கண்ணகி தலைமையில் ஆத்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மல்பெரி வளர்ப்பு மற்றும் வெண்பட்டு வளர்ப்பு தொழில் நுட்பங்கள் குறித்து ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.
ஜோலார்பேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் திரு. வேல்முருகன் துறை சார்ந்த மானிய திட்டங்கள் பற்றியும், இளநிலை பட்டு ஆய்வாளர் திரு. ராஜ்குமார் பட்டு வளர்ப்பு தொழில்நுட்பங்கள் பற்றி எடுத்துரைத்தார். உதவிப்பட்டு ஆய்வாளர் திருமதி கல்யாணி பட்டு வளர்ச்சி துறை மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார்.
தேசிய உணவு பாதுகாப்பு ஆலோசகர் திரு வாசுதேவரட்டி, இயற்கை முன்னோடி விவசாயி விஸ்வநாதன் , திரியாலம் ஊராட்சி மன்ற தலைவர், வேளாண்மை உதவி அலுவலர் திருமதி. மேகலா, ஆத்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமதி. மேரி வீனஸ், உதவி தொழில் நுட்ப மேலாளர் திரு. ஸ்ரீநாத் மற்றும் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
-S.Mohan