கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சி உட்பட 246 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 9 கோடி மதிப்பீட்டில் பனி ஆணையினை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட 10 ஊராட்சிகளை சேர்ந்த மொத்தம் 246 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ர ஏறக்குறைய ரூபாய் 9 கோடி மதிப்பீட்டில் பணி ஆணைகளை விஷமங்கலம் ஸ்ரீ வெற்றி தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி வழங்கினார்.
இந்நிகழ்வினை மட்றப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பூபதி, விஷமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அழகிரி ஆகியோர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்கள். மாவட்ட கவுன்சிலர் மற்றும் மத்திய ஒன்றிய கழக செயலாளர் K.A.குணசேகரன், கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மோகன்ராஜ் வாழ்த்துரை வழங்கினார்கள். திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பயனாளிகளுக்கு கலைஞர் கனவில் உள்ள திட்ட பணி ஆணையினை வழங்கி பேசுகையில்:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெண்களுக்கு என சிறப்பு கவனம் செலுத்தி மகளிர் உரிமை தொகை, இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கந்திலி ஒன்றியத்தில் அதிகமான வீடுகளை கற்றுத் தந்து ஏழை எளிய நடுத்தர குடிசைகளில் வாழும் மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்களின் குடிசை இல்லா வீடுகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தி வருகிறார். மகளிர்களுக்கான சிறந்த ஆட்சியாக நம்முடைய ஆட்சி செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஒன்பது ஏறக்குறைய கோடி மதிப்பீட்டில் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட 10 ஊராட்சிகளை சேர்ந்த 246 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டம் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பயனாளிகள் ஒரு ரூபாய் கூட லஞ்சம் தராமல் ஏழை எளிய நடுத்தர மக்கள் தங்களின் கனவு இல்லத்தை நினைவாக்கிக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டு பேசினார். இந்நிகழ்வில் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் விஷமங்கலம் அழகிரி, எலவம்பட்டி மேனகா விவேகானந்தன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன், மட்றப்பள்ளி மஞ்சுளா பூபதி, குரும்பேரி ராமு, சின்னாரம்பட்டி ஊராட்சி தலைவர் சண்முகம், சிம்மனபுதூர் மலர் தண்டபாணி, பேராம்பட்டு சாந்தி முருகன், சின்னாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தாமோதரன், விஷமங்கலம் ஒன்றிய கவுன்சிலர் வினோத், உடையா முத்தூர் ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகரன், கந்திலி கிழக்கு மாவட்ட பிரதிநிதி T K.தணிகாசலம், கந்திலி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சீனிவாசன், கொரட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் கொரட்டி கோவிந்தசாமி, எலவம்பட்டி ஆனந்தன் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள், ஊராட்சி எழுத்தர்கள், துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், பயனாளிகள், ஊராட்சி பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி இறுதியில் விஷமங்கலம் ஊராட்சி மன்ற செயலாளர் K.தமிழரசி நன்றியுரை வழங்கினார்.
– S.மோகன், செய்தியாளர்