
குடியரசுத்தலைவர்:
ஹோலிப் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“புனிதமான ஹோலிப் பண்டிகையையொட்டி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
வண்ணங்களின் திருவிழாவான ஹோலி மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொண்டுவருகிறது. இந்தப் பண்டிகை நமது வாழ்க்கையில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்க்கிறது. ஹோலிப் பண்டிகையின் பலவகையான வண்ணங்கள் வேற்றுமையில் ஒற்றுமை என்ற மாண்பை பிரதிபலிக்கிறது. இந்தப் பண்டிகை தீமையை நன்மை வெல்லும் என்பதன் அடையாளமாகவும் திகழ்கிறது. நம்மை சுற்றிலும் அன்பும், நேர்மறை எண்ணங்களும் வரவர நமக்கு இந்தப் பண்டிகை போதிக்கிறது.
வண்ணங்களின் திருவிழாவான இது உங்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், வளத்தையும் சேர்க்கட்டும்.”
குடியரசுத் துணைத் தலைவர்:
ஹோலி பண்டிகையையொட்டி, குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியையும், வசந்த காலத்தின் வருகையையும் குறிப்பதாக ஹோலி பண்டிகை உள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்தப் பண்டிகை புதிய தொடக்கத்தையும், வளத்தையும் குறிப்பதாகவும் அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பாரம்பரியத்தைக் கொண்டாடும் அதேவேளையில், வண்ணமயமான ஹோலி பண்டிகை ஒற்றுமை உணர்வுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது என்றும் கூறியுள்ளார். ஹோலிப் பண்டிகையின் பல விதமான வண்ணங்கள் நாட்டின் வளமான கலாச்சார பன்முகத்தன்மையை நினைவூட்டுவதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஹோலிப் பண்டிகை நமது எண்ணங்களை கருணை உணர்வுடனும், இரக்கத்துடனும், தேசத்திற்கான நம்பிக்கையுடனும் வண்ணமயமான ஒரு நினைவூட்டலாக இருக்கட்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர்:
பிரதமர் திரு. நரேந்திர மோடி அனைவருக்கும் இன்று ஹோலி பண்டிகை நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தப் பண்டிகை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புதிய உற்சாகத்தையும், சக்தியையும் ஊட்டுவதாகவும், நாட்டு மக்களிடையே ஒற்றுமையின் வண்ணத்தை ஆழப்படுத்துவதாகவும் இருக்கட்டும் என திரு மோடி வாழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவு வருமாறு:
“உங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான ஹோலிப் பண்டிகை வாழ்த்துகள். மகிழ்ச்சியும், குதூகலமும் நிறைந்த இந்தப் புனிதப் பண்டிகை, அனைவரின் வாழ்க்கையிலும் புதிய உற்சாகத்தையும் ஆற்றலையும் கொண்டு வரவும், நாட்டு மக்களிடையே ஒற்றுமையின் வண்ணங்களை ஆழப்படுத்தவும் வாழ்த்துகிறேன்.”