சான்றோர் சுடர் மாத இதழின் மூன்றாம் ஆண்டு விழா இன்று 27-07-2024 மாலை 6 மணிக்கு சென்னை நிருபர்கள் மன்றம் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பத்திரிகை மற்றும் ஊடக சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக சினேகன் – பாடல் ஆசிரியர் கவிஞர், விஜயகுமார் – நடிகர் சமூக சேவகர், சான்றோர் சுடர் ஆசிரியர் தமிழ்வாணன், பாலகுமாரன், சிறப்பு அழைப்பாளர்களாக: ரஜினிபாலா – ஆசிரியர் வாய்மைக்குரல், K ஜெகதீசன் – ஆசிரியர் பகுஜன் குரல், டி. பிரபாகரன் – வின் பத்திரிக்கையாளர்கள் சங்கம், C. பெஞ்சமின் – ஆசிரியர் வெளிச்சம் – அரசு யூடியூப் சேனல், V. ரஞ்சன் – ஆசிரியர் நீதியின் பாதை,ஜோசப் ராஜ் – ஆசிரியர் நெற்றிக்கண் பார்வை, சிவசங்கர் – வெளியீட்டாளர் பேனா குரல், R. கவிதா – பின்னணி குரல் – புதிய தலைமுறை டிவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் சிறப்பாக பணிபுரிந்த பத்திரிகையாளர்களுக்கு கேடையம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் சான்றோர் சுடர் வெளியீட்டாளர் ஜெயேந்திரன் அவர்களுக்கு பேனா குரல் வெளியீட்டாளர் சிவசங்கர் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்.
விழா ஏற்பாட்டை ஆர்.ஜெயேந்திரன் – வெளியீட்டாளர் சான்றோர் சுடர் மற்றும் யுவராஜ் – கடல் துளிகள் ஆசிரியர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
-P.Karthikeyan