சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான ‘தேசிய ஒற்றுமை தினத்தன்று’ நடத்தப்படும் ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’, இந்த முறை அக்டோபர் 29-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இதனை தெரிவித்துள்ளார். சர்தார் படேலின் பிறந்தநாளான அக்டோபர் 31-ஆம் தேதி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையுடன் இணைந்திருப்பதாக பிரதமர் கூறினார். ஒவ்வொருஆண்டும் அக்டோபர் 31-ஆம் தேதி ‘தேசிய ஒற்றுமை தினத்தன்று’, ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’ நடைபெறுகிறது என்றார். இந்த முறை தீபாவளியை முன்னிட்டு ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’ அக்டோபர் 29-ஆம் தேதியே (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. நாட்டு மக்கள் இதில் அதிகபட்ச எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டும் என்றும், நாட்டின் ஒற்றுமையுடன் உடற்பயிற்சி என்ற தாரக மந்திரத்தை எங்கும் பரப்ப வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
‘தேசிய ஒற்றுமை தினத்தன்று’, சர்தார் வல்லபாய் படேலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள், அக்டோபர் 31-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.