மொரீஷியஸ் நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர் நவின் ராம்கூலமின் தேர்தல் வெற்றிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
“என்னுடைய நண்பர் டாக்டர் நவின் ராம்கூலம் @Ramgoolam_Dr உடன் இணக்கமாக உரையாடினேன், அவருடைய வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துகள். மொரிஷியஸை வழிநடத்துவதில் அவருக்கு பெரும் வெற்றி கிடைக்க வாழ்த்து தெரிவித்ததோடு, இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். எங்களின் சிறப்பு மற்றும் தனித்துவமான கூட்டாண்மையை வலுப்படுத்த, நெருக்கமாக இணைந்து பணியாற்ற விழைகிறேன்.”