சென்னை மெப்ஸ் – சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் தொழிலக அனுமதி குழுவின் கூட்டம், சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் வளர்ச்சி ஆணையர் திரு அலெக்ஸ் பால் மேனன் தலைமையில் இன்று (23.12.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு அது சம்பந்தமான முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் முடிவில் 22 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது, வர்த்தக வளர்ச்ச்சியை மேம்படுத்தும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் உறுதிப்பாட்டை இது எடுத்துக்காட்டுகிறது.



முக்கிய அம்சங்கள்:
அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகள்:சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் மொத்தம் ரூ.194.20 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
வேலைவாய்ப்பு உருவாக்கம்: அனுமதி அளிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் 6028 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், இது மண்டலத்தின் வேலைவாய்ப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் திறமையான துறைசார் நிபுணர்களை பணியமர்த்துதல்:
மெப்ஸ் – சிறப்புப் பொருளாதார மண்டலம், ஒப்புதல் அளிக்கும் செயல்முறையை எளிதாக்குவதற்கும், வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு ஏற்ற சூழலை வளர்ப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது. அனைத்து ஒழுங்குமுறை அளவுகோல்களுக்கும் இணக்கமான திட்டங்களுக்கு ஒரே நாளில் ஒப்புதல் கடிதங்களை வழங்கும் கொள்கையை தொழில் அனுமதி குழு மீண்டும் வலியுறுத்தியது.
கூட்டங்களை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை நடத்துவது என்பது புதிய தொழிலகங்ளுக்கு உடனடி ஒப்புதல்கள் கிடைக்க உதவும். மேலும் அவை தாமதமின்றி செயல்பாடுகளைத் தொடங்கவும் உதவும். அதே நேரம் ஏற்கனவே உள்ள தொழில் அலகுகளுக்கு அவற்றின் அன்றாட நடவடிக்கைகளைப் பாதிக்காமல் சுமூகமான செயலாக்கம் உறுதி செய்யப்படும் என்று சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் வளர்ச்சி ஆணையர் திரு அலெக்ஸ் பால் மேனன் கூறினார். பெண் ஊழியர்களுக்கான உதவித்தொகைத் திட்டங்களை அறிமுகப்படுத்துமாறு அனைத்துப் பிரிவுகள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும் ஊக்குவித்த அவர், இதுபோன்ற முயற்சிகள் கல்வியைத் தொடர அதிகமான எண்ணிக்கையில் பெண்களை ஊக்குவிக்கும் என்று வலியுறுத்தினார். கூடுதலாக, ஒவ்வொரு பிரிவும், சிறப்புப் பொருளாதார மண்டலமும் தங்கள் வேலைப்பிரிவில் தேவைப்படும் குறிப்பிட்ட தொழில் திறன்களை அடையாளம் காணவும், திறன் அடிப்படையிலான பயிற்சியை வழங்கவும் அல்லது தொழில்திறன் பெற்ற தொழிலாளர்களின்தேவை குறித்து வளர்ச்சி ஆணையர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த சமீபத்திய ஒப்புதல்களுடன், மெப்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலம், முதலீடுகளை எளிதாக்கியுள்ளது. இது பிராந்தியத்தில் கணிசமான மூலதனம் கிடைப்பதற்கும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவுவதோடு பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அதன் உறுதிப்பாட்டையும் மேம்படுத்தும்.
